கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் 3 ஆம் கட்டமாகமே 17ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்த மூன்றாம் கட்ட ஊரடங்கு இன்றுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் அரசு என்ன செய்யப் போகிறது எனகேள்வி எழுப்பி முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் டிவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
கரோனா பரவுவதை பாஜக அரசால்தடுக்க முடியாது, காரணம் அரசின் நிர்வாக இயந்திரம் பழுதடைந்து கிடக்கிறது. இதைச் செய்யக் கூடிய உள்ளாட்சி அமைப்புகள் பல மாநிலங்களில் கிடையாது அல்லது அதிகாரங்கள் இல்லாமல் இருக்கின்றன. ஊரடங்கு 3.0 இன்றுடன் முடிவடைகிறது அரசு என்ன செய்யப் போகிறது? என தெரிவித்துள்ளார்.