/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cbse33222.jpg)
ஜனவரி- 31 ஆம் தேதி நடந்த மத்திய ஆசிரியர் தகுதிதேர்வு (Central Teacher Eligibility Test- CTET) முடிவுகளை இன்று (26/02/2021) வெளியிட்டது சி.பி.எஸ்.சி.
இது தொடர்பாக சி.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'மத்திய ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாளுக்கு 16,11,423 பேர்விண்ணப்பித்திருந்தனர். இதில் 12,47,217 பேர் தேர்வை எழுதிய நிலையில், 4,14,798 பேர் தகுதிபெற்றுள்ளனர். அதேபோல், இரண்டாம் தாளுக்கு 14,47,551 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில் 11,04,454 பேர் தேர்வு எழுதிய நிலையில், 2,39,501 பேர் தகுதிபெற்றுள்ளனர். தேர்வர்கள் www.ctet.nic.in, www.cbse.nic.inஆகிய இணையதளங்களுக்குச் சென்று, தங்களது பதிவு எண்ணை (Roll Number) பதிவிட்டு தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)