கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு அதிகரிப்பு!

Crude oil import cost increase!

நடப்பு நிதியாண்டின்முடிவில் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி மதிப்பு ஏழரை லட்சம் கோடி ரூபாயைத் தாண்ட உள்ளதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது.

2021- 2022 ஆம் நிதியாண்டில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை, 10 மாதங்களில் இந்தியா ரூபாய் 7.7 லட்சம் கோடி ரூபாய்க்கு கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்திருக்கிறது. ஏழு ஆண்டுகளுக்கு பிறகு ஜனவரி முதல் கச்சா எண்ணெய் விலை உயரத் தொடங்கிய நிலையில், அடுத்த மாதத்தில் மட்டும் 87,000 கோடி ரூபாய்க்கு இந்தியா கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யவுள்ளது. கடந்த 2021- ஆம் ஆண்டு ஜனவரியில் இது ரூபாய் 58,000 கோடியாக இருந்தது.

நாட்டின் கச்சா எண்ணெய் தேவையில் 85%-ஐஇந்தியா இறக்குமதி செய்து வருகிறது. கடந்த 2020- 2021 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு சுமார் 4 லட்சம் கோடி ரூபாயாக இருந்த நிலையில், இந்த நிதியாண்டின் முடிவில் அது இரு மடங்காக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கச்சா எண்ணெய் இறக்குமதி மட்டுமின்றி கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜனவரி வரை பெட்ரோலிய பொருட்களாக 3.36 லட்சம் ரூபாய்க்கு இறக்குமதி நடைபெற்றுள்ளதாக புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் மொத்த கச்சா எண்ணெய் தேவையில் இந்தியா கடந்த 2019- 2020 ஆம் நிதியாண்டில் 15% உற்பத்தி செய்துள்ளது. 2020- 2021- ல் 15.6% ஆக அதிகரித்த உற்பத்தி, நடப்பு நிதியாண்டில் இதுவரை 14.9% ஆக குறைந்துள்ளது.

export India
இதையும் படியுங்கள்
Subscribe