Skip to main content

செல்போன் பேச்சு... ஓடும் ரயிலில் இருந்து இறங்கும் போது நடந்த விபரீதம்!

Published on 24/12/2019 | Edited on 24/12/2019


மராட்டியத்தில் ஓடும் ரயிலில் இருந்து இறங்கும் போது இளைஞர் ஒருவர் தண்டவாளத்தில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநிலத்தில் உள்ள கோண்டியா ரயில் நிலையத்திற்கு வந்த மிந்சார ரயிலில் இருந்து பயணிகள் அனைவரும் இறங்கிய நிலையில், இளைஞர் ஒருவர் செல்போனில் பேசியபடியே இருந்துள்ளார். தான் இறங்க வேண்டிய இடம் வந்தது கூட தெரியாமல் அவர் செல்போனில் சுவரசியமாக பேசியப்படி இருந்துள்ளார். 



இந்நிலையில், ரயில் மெதுவாக புறப்பட தயாரான போது அவர் தான் இறங்க வேண்டிய இடத்தை ரயில் கடப்பதை பார்த்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், வேகமாக ரயிலில் இருந்து இறங்க முற்பட்டுள்ளார். எதிர்பாராத விதமாக அவர் ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே இருக்கும் பள்ளத்தில் விழுந்துவிட்டார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் ஒருவர் சாதூரியமாக செயல்பட்டு அவரை மீட்டுள்ளார். இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 
 

 

சார்ந்த செய்திகள்