Advertisment

உடலுக்கு வெளியில் தொங்கும் குடல்! - நிதியுதவி மறுக்கப்பட்ட இராணுவ வீரர்

பணியில் இருந்தபோது நடத்தப்பட்ட தாக்குதலில் குடல் வயிற்றுக்கு வெளியில் வந்த இராணுவ வீரருக்கு தகுந்த நிதியுதவி வழங்கப்படாமல், மறுக்கப்பட்டு வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

crpf

மத்தியப்பிரதேசம் மாநிலம் மொரேனா பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ் தோமர். இவர் மத்திய ரிசர்வ் போலிஸ் படையில் கமாண்டோவாக பணியாற்றி வந்துள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு சண்டிகர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 11 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலின் போது அங்கு பணியில் இருந்த தோமரின் வயிற்றில் ஏழு குண்டுகள் பாய்ந்தன. வயிற்றில் இருந்த குண்டுகள் வெளியில் எடுக்கப்பட்டாலும், தோமரின் வயிற்றுக்கு வெளியே தொங்கிக்கொண்டிருக்கும் பெருங்குடல் பாலிதீன் கவரால் கட்டப்பட்டு கடந்த 4 ஆண்டுகளாக சிகிச்சை கிடைக்காமல் தவித்து வருகிறார்.

Advertisment

தனக்குநிதியுதவி கிடைத்தாலும் அது போதுமானதாக இல்லை. மத்திய உள்துறை அமைச்சர் தன் தொகுதி நிதியில் இருந்து ரூ.5 லட்சம் தருவதாக கூறியிருந்தாலும், அது எனக்கு இன்னமும் கிடைக்கவில்லை. எனது ஒரு கண்ணில் பார்வை பறிபோய்விட்டது. நாட்டுக்காக 16 ஆண்டுகள் சேவை செய்த எனக்கே இந்த நிலைமை என்றால் என்ன செய்வது என தோமர் வேதனை தெரிவித்துள்ளார்.

MadhyaPradesh indian army crpf
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe