Advertisment

ஆர்கெஸ்ட்ரா பார்க்க கூடிய கூட்டம்; பால்கனி இடிந்து 100 பேர் காயம்

A crowd to watch the orchestra at the festival; 100 people were injured when the balcony collapsed

திருவிழாவின் போது விழா நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டிருந்த 100க்கும் மேற்பட்டோர் பால்கனி இடிந்து விழுந்து காயமடைந்த சம்பவம் பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான காட்சிகள் வைரலாக பரவி வருகிறது.

Advertisment

பீகார் மாநிலம் இசுவாபூர் பகுதியில் 'மகாவீர் மேளா' நிகழ்ச்சி நடைபெற்றது. சுமார் பல்லாயிரக்கணக்கான மக்கள் அந்த பகுதியில் கூடியிருந்தனர். நேற்று அங்கு இன்னிசை கச்சேரி நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதை பார்ப்பதற்கு ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர். மாடி வீடுகளில் இருந்தவர்கள் பால்கனி வாயிலாக நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டிருந்தனர். சிலர் வீட்டின் மாடியில் அமர்ந்தும் நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டிருந்தனர்.

Advertisment

ஒரு வீட்டின் மிகப்பெரிய பால்கனியில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் நின்றபடி இன்னிசைக் கச்சேரியை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென அந்த பால்கனி இடிந்து விழுந்தது. இதில் 100க்கும் மேற்பட்டோர் சிக்கி காயமடைந்துள்ளனர். உடனடியாக மீட்கப்பட்ட அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று நடந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Bihar Festival
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe