Advertisment

மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம்: முதல்வர் உத்தரவு

மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம்: முதல்வர் உத்தரவு

மைசூரு: மழையால் நாசமடைந்துள்ள விவசாய பயிர்களுக்கு நிவாரணம் வழங்க அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். மைசூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் சித்தராமையா பேசியதாவது: கர்நாடக திறந்தவெளி பல்கலைகழகம் எந்த காரணத்துக்கும் மூடப்படாது. பல்கலை கழகத்துக்கு மறுபடியும் அங்கீகாரம் வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அங்கீகாரம் வழங்கும் பொறுப்பு யூ.ஜி.சிக்கு உள்ளதால் மத்திய அரசு உடனே அங்கீகாரம் வழங்க வலியுறுத்தப்படும். அதே போல் பல்கலை கழகத்தில் பணி புரியும் ஊழியர்கள், விரிவுரையாளர்கள் யாரும் பணியிட மாற்றம் செய்யப்படமாட்டார்கள்.
Advertisment

அவர்கள் தொடர்ந்து திறந்த வெளி பல்கலை கழகத்திலேயே வேலை செய்வார்கள். அதே போல் பல்கலை கழகத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகளில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அமைச்சருக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்துள்ளதால் விவசாய பயிர்கள் நாசமடைந்துள்ளது. அப்படி நாசமடைந்துள்ள பயிர்களுக்கு நிவாரணம் வழங்க அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. என்றார்.
Advertisment

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe