Skip to main content

மொத்த எம்எல்ஏக்களில் பாதிபேர் மீது குற்றவழக்கு... அதிர்ச்சி தரும் ஜார்க்கண்ட் மாநிலம்!

Published on 28/12/2019 | Edited on 28/12/2019

ஹரியானாவில் சில மாதங்களுக்கு முன்பு பொதுத்தேர்தல் நடைபெற்றது. எதிர்பார்க்காத வெற்றியை பெறுவோம் என்று கூறிய பாஜகவுக்கு தேர்தல் முடிவுகள் சற்று அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் கொடுத்தது. மிக பெரிய வெற்றி பெறுவோம் என்று மார்தட்டிய பாஜக மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 40 தொகுதிகளில் மட்டுமே வென்றது. தோல்வி அடையும் என்று எதிர்பார்த்த காங்கிரஸ் கட்சி, அக்கட்சியினரே எதிர்பார்க்காத வகையில் 30 இடங்களில் வென்று பாஜகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. மெஜாரிட்டி யாருக்கும் கிடைக்காத நிலையில், ஜனநாயக ஜனதா கட்சியின் 10 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவோடு பாஜக ஆட்சி அமைத்தது. 



இந்நிலையில் நடந்து முடிந்த ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற 41 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளதாக தற்போது தெரிய வந்துள்ளது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவில் உள்ள 30 சட்டமன்ற உறுப்பினர்களில் ஏக்களில் 17 பேர் மீது கிரிமினல் வழக்கு உள்ளது. காங்கிரசின், 16 சட்டமன்ற உறுப்பினர்களில் 8 பேர் மீதும் கிரிமினல் வழக்குகள் உள்ளதாக கூறப்படுகின்றது. பாஜகவின், 25 சட்டமன்ற உறுப்பினர்களில்  11பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற அம்மாநில தேர்தலில் 55 எம்.எல்.ஏக்கள் மீது கிரிமினல் வழக்குகுகள் நிலுவையில் இருந்தது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“யாருக்கும் எங்கும் நடக்கக்கூடாது” - நொறுங்கிப் போன துல்கர் சல்மான்

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
Dulquer Salmaan condemn about Spanish couple attack

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த தம்பதியர், இருசக்கர வாகனத்தில் ஆசியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். முதலில் பாகிஸ்தான் சென்ற அவர்கள், பின்பு பங்களாதேஷ் சென்று, நேபாள் செல்வதற்கு ஜார்க்கண்ட் வழியாக சென்றுள்ளனர். அப்போது  ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இருந்து தும்கா மாவட்டத்தில் உள்ள குறுமுகத் என்ற பகுதிக்கு சென்றனர். அங்கு அந்த தம்பதியர், இரவில் தற்காலிக கொட்டகை ஒன்றை அமைத்து தங்கியிருந்தனர்.

கடந்த 1ஆம் தேதி அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு 7 பேர் கொண்ட கும்பல் வந்து, கணவரை அடித்து தாக்கிவிட்டு, அந்த இளம்பெண்னை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர், அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக தம்பதியினர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, இருவரையும் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அந்த இளம்பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே பாதிக்கப்பட்ட பெண் சமூக வலைதளத்தில் உருக்கமாக வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.  

இதையடுத்து தம்பதியினர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மீதமுள்ள 4 பேரை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். இந்தியாவுக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு இளம்பெண்ணுக்கு நடந்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பலரும் இது தொடர்பாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் துல்கர் சல்மான், “இதைக் கேட்டு நொறுங்கிப் போனேன். நீங்கள் இருவரும் சமீபத்தில் கோட்டயத்திற்குச் சென்றிருந்தீர்கள், அங்கு நெருங்கிய நண்பர்கள் உங்களுக்கு உணவளித்தனர். இது யாருக்கும் எங்கும் நடக்கக்கூடாது” என அவரது சமூக வலைத்தளப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே பாலிவுட் நடிகை மற்றும் அரசியல் ஆர்வலரான ரிச்சா சதா, “வெட்கக்கேடானது. இந்தியர்கள் தங்கள் சொந்தப் பெண்களை நடத்துவது போல் வெளிநாட்டினரை நடத்துகிறார்கள். நமது அழுகிய சமூகத்தைப் பார்த்தால் அவமானமாக இருக்கிறது” என அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Next Story

ஹேமந்த் சோரன் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

Published on 02/02/2024 | Edited on 02/02/2024
Supreme Court refuses to hear Hemant Soran's petition

ஜார்க்கண்ட் மாநில முதல்வராக பெரும் எதிர்பார்ப்புடன் ஆட்சியில் அமர்ந்தவர் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன். முக்தி மோர்ச்சா கட்சி காங்கிரசுடன் கூட்டணி அமைத்து செயல்பட்டு வந்தது. இந்த சூழலில், முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் தற்போது சிக்கலில் சிக்கித் தவித்து வருகிறார். இவர் சுரங்க முறைகேட்டுடன் தொடர்புடைய பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி, ஹேமந்த் சோரன் மீதான சட்ட விரோதப் பணப்பரிமாற்ற வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.

இது தொடர்பாக அமலாக்கத்துறை ஹேமந்த் சோரனுக்கு 7 முறை சம்மன் அனுப்பியும் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனையடுத்து, ஜனவரி 20 ஆம் தேதிக்குள் விசாரணைக்கு ஆஜராகுமாறு ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியிருந்தது. அதற்கு, ‘ஜனவரி 20 ஆம் தேதி ராஞ்சியில் உள்ள தனது இல்லத்தில் தன்னிடம் விசாரணை நடத்தலாம்’ என சோரன் அமலாக்கத்துறைக்கு கடிதம் எழுதியிருந்தார். இதனையடுத்து நேற்று முன்தினம் (31.01.2024) ஹேமந்த் சோரனை அவரது இல்லத்தில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

சுமார் 7 மணி நேரம் நடைபெற்ற இந்த விசாரணைக்குப் பிறகு அமலாக்கத்துறையால் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார். முன்னதாக மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்து ஹேமந்த் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். அதே சமயம் அமலாக்கத்துறை கைது செய்ததற்கு எதிராகவும், அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை ரத்து செய்யகோரியும் ஜார்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 

Supreme Court refuses to hear Hemant Soran's petition

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (02.02.2024) காலை நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, சுந்தரேஷ் மற்றும் பேலா திரிவேதி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை விசாரிக்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர். மேலும் “உயர்நீதி மன்றத்தை நாடாமல் ஏன் உச்ச நீதிமன்றத்தை நாடினீர்கள்” எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தை தான் அணுக வேண்டும் எனவும் அறிவுத்தினர்.