கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம், கடந்தாண்டு நடத்திய டி20 கிரிக்கெட் தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக எழுந்த புகாரையடுத்து, பெல்லாரி கிரிக்கெட் அணியின் கேப்டன் சி.எம். கவுதம், அப்ரார் காஸியை கைது செய்தது கர்நாடக காவல்துறை. கைது செய்யப்பட்ட சி.எம்.கவுதம் ஐபிஎல் தொடரில் டெல்லி மற்றும் மும்பை அணிகளுக்காக விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

Cricket Premier League ... International broker arrested

சூதாட்டம் தொடர்பாக பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணி வீரர்கள் விஸ்வநாதன், நிஷாந்த், பயிற்சியாளர் விணுபிரசாத் ஆகியோரை ஏற்கனவே கைது செய்தது காவல்துறை.இந்நிலையில் ஹரியானவை சேர்ந்த சயாம் என்ற சர்வதேச கிரிக்கெட் தரகரை காவல்துறை கைது செய்தது. மேலும் அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது.