ராட்சத க்ரேன் கவிழ்ந்து கோரவிபத்து... ஒன்பது பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு... (வீடியோ)

crane accident in vishakapatnam

விசாகப்பட்டினத்தில் ராட்சத க்ரேன் கவிழ்ந்ததில் ஒன்பது பேர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர்.

விசாகப்பட்டினத்தில் உள்ள இந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட்டில் சனிக்கிழமை காலை 70 டன் எடையுள்ள ஹெவி டியூட்டி க்ரேன் கவிழ்ந்த விபத்தில் குறைந்தது 9 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 11.50 மணியளவில், புதிதாக வந்த க்ரேனை ஊழியர்கள் சோதித்து பார்த்துக்கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.

மீட்பு நடவடிக்கையின்போது, அதிகாரிகள் ஒன்பது உடல்களையும், காயமடைந்த ஒரு நபரையும் மீட்டனர். கடற்படையினர் அப்பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆரம்பத்தில், விபத்து நடந்த பகுதியிலிருந்து வெளியான தகவல்களின் அடிப்படையில், அந்த இடத்தில் சுமார் 30 தொழிலாளர்கள் இருந்தனர் எனக் கூறப்பட்டது. ஆனால், இந்த தகவலை போலீஸார் மறுத்துள்ளனர். இந்நிலையில், இந்த விபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாகவும், படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

accident Andhra
இதையும் படியுங்கள்
Subscribe