Advertisment

டெல்லியில் அதிரடி! கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் திடீர் மாற்றம்!

இடதுசாரி இயக்கங்களில் முக்கிய கட்சியாக இருப்பது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. இந்த கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக இருப்பவர் சுதாகர் ரெட்டி. இவர் கடந்த இரண்டு முறையாக கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றி வருகிறார்.

Advertisment

c

இந்த நிலையில் தனது உடல் நிலையை காரணம் காட்டி கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு வேறு ஒருவரை நியமிக்க வேண்டுமென கடந்த ஓராண்டாக சுதாகர் ரெட்டி மத்திய குழுக் கூட்டத்தில் கூறி வந்தார். இதன் தொடர்ச்சியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளராக இருப்பவர் தமிழகத்தை சேர்ந்த டி. ராஜா தற்போது மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.

டி. ராஜா கடந்த 20 வருடங்களாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய தலைமையில் பணியாற்றி வருகிறார். பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி தனக்கு சளித் தொந்தரவு அதிகம் இருப்பதால் ஓய்வு கொடுக்க வேண்டும் என கட்சியின் செயற்குழுவில் கேட்டுக்கொண்டதோடு பொதுச்செயலாளர் பொறுப்பிற்கு டி. ராஜாவை பரிந்துரை செய்கிறேன் என கூறியிருக்கிறார். அதன்படி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் 19 மற்றும் 20ம் தேதிகளில் டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்து வருகிறது.

Advertisment

இந்தநிலையில் பொதுச் செயலாளர் மாற்றம் முக்கிய அஜென்டாவாக விவாதிக்கப்பட்டு சுதாகர் ரெட்டியின் பரிந்துரையை ஏற்பது என தேசிய செயற்குழு ஒப்புதல் கொடுத்துள்ளது. இதன்படி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக டி. ராஜா நாளை 20, 7.19 ந் தேதி அறிவிக்கப்பட உள்ளார். கம்யூனிஸ்ட் கட்சிக்கு பொதுச்செயலாளராக தமிழகத்தை சேர்ந்த டி. ராஜா வருவது அக்கட்சி வட்டாரத்தை உற்சாகப்படுத்தியுள்ளது.

d.raja
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe