உத்தரப்பிரதேச மாநிலம் ஹார்டோய் பகுதில் மாடு கடத்த வந்ததாக கூறி, இளைஞர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

cow vigilance in uttarpradesh

Advertisment

Advertisment

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பசுக்களை பாதுகாக்க, பசு கண்காணிப்பு குழு என்ற அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. இந்த பசு பாதுகாவலர்கள் திட்டம் பல்லவேறு சர்ச்சைகளை சந்தித்து வந்தாலும், இன்று வரை அந்த மாநில அரசு இதற்கு எதிராக பெரிய அளவில் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் நிலவி வருகிறது. இந்த நிலையில், ஹார்டோய் பகுதியில் உள்ள தோட்டத்தில் ஏராளமான மாடுகள் கட்டப்பட்டிருந்த நிலையில், அவற்றை, இளைஞர்கள் சிலர் கடத்த முயன்றதாக கூறப்படுகிறது.

இதனையறிந்து, அங்கு சென்ற பசு பாதுகாப்பு குழுவினரும், போலீசாரும் இணைந்து, அந்த இளைஞர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் சிலர் தப்பியோடியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் காயமடைந்த 2 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இளைஞர்கள் மீது போலீசார் நடத்திய இந்த துப்பாக்கிசூடு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.