Advertisment

எஜமானருக்கு ராஜ விஸ்வாசமாக இருக்கும் பசுமாடு... ஆச்சரியத்தில் பொதுமக்கள்!

மாடு ஒன்று தன்னுடைய எஜமானர் தாக்கப்படுவதை பார்த்ததும் ஆவேசம் அடந்து அவரை காப்பாற்ற முயற்சி செய்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இம்ரான் சுனா என்பவர் தன்னுடைய தோட்டத்தில் பசு பண்ணை வைத்துள்ளார். இதில் 10க்கும் மேற்பட்ட பசுக்களை அவர் வளர்த்து வருகிறார். பண்ணையில் உள்ள பசுக்கள் அனைத்தும் அவரிடம் அன்பாக இருக்கும். அந்த அன்பின் உச்சகட்டமாக இம்ரானை ஒரு குறிப்பிட்ட ஒரு மாட்டின் முன்பு யாராவது தாக்க முற்பட்டால் அவரை ஓடிவந்து துரத்தி எஜமானரிடம் இருந்து விரட்டியடிக்கின்றது.

Advertisment

எவ்வளவு துரத்தில் மாடு இருந்தாலும், இம்ரான் அழைத்ததும் அடுத்த வினாடியே அங்கு மாடி ஓடி வருகின்றது. இணையத்தில் வைரலாகும் இந்த வீடியோவை பலரும் தங்களின் முகநூல் பக்கங்களில் ஷேர் செய்து வருகிறார்கள். மேலும் அந்த பகுதி மக்கள் அந்த மாட்டை வந்து பார்த்து செல்வதுடன் இம்ரானை அடிப்பது போல் பாவ்லா செய்துமாட்டை சீண்டிவிட்டு செல்கிறார்கள்.

VIRAL
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe