covishield test in india

ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் கரோனா தடுப்பூசியை இந்தியாவில் இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட சோதனைகளுக்கு உட்படுத்துவதற்கு அனுமதி பெற்றுள்ளது செரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனம்.

Advertisment

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், இதற்கான தடுப்பு மருந்து கண்டறியும் பணிகள் பல நாடுகளில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் கண்டறிந்துள்ள கரோனா தடுப்பூசி, ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. “கோவிஷீல்ட்” எனும் இந்த தடுப்பு மருந்தை இந்தியாவில் தயாரிக்கும் உரிமையை செரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா (எஸ்ஐஐ) நிறுவனம் பெற்றுள்ளது.

Advertisment

இந்த தடுப்பு மருந்தின் 2-வது மற்றும் 3-வது கட்ட மனிதர்கள் மீதான பரிசோதனை பிரிட்டனில் நடந்து வருகிறது. இதேபோல உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் உள்ள மக்களுக்கு இந்த மருந்து பரிசோதனை அடிப்படையில் செலுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், இந்தியாவில் இந்த மருந்தை கொண்டு மனிதர்கள் மீது 2-ம் மற்றும் 3-ம் கட்ட கிளினிக்கல் பரிசோதனையை நடத்த செரம் நிறுவனம் டிசிஜிஐ அமைப்பிடம் அனுமதி பெற்றுள்ளது.