உலகில் பலநாடுகளில்கரோனாதடுப்பு மருந்துகள் தொடர்பாகஅடுத்தகட்ட பரிசோதனைகள் மேற்கொண்டுவரும்நிலையில், ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தின் 'கோவிஷீல்ட்'எனும்கரோனா தடுப்பு மருந்து பரிசோதனை தற்காலிகமாக இந்தியாவில் நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் இரண்டு மருத்துவமனைகளில் சீரம் நிறுவனம் சார்பில் 300 பேருக்கு பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால்ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் உருவாக்கிய கரோனா தடுப்பு மருந்துசிலருக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்துவதாக தகவல்கள் வெளியான நிலையில் இந்தியாவில் கோவிஷீல்ட்மருந்து பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே உலகம் முழுவதும் பல நாடுகளில் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் தயாரித்த இந்த மருந்துக்கான பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டநிலையில் இந்தியாவிலும்நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.