ADVERTISEMENT

கோவிஷீல்ட் டோஸ்களின் இடைவெளி சர்ச்சை - மத்திய அரசு புதிய விளக்கம்!!

04:35 PM Jun 16, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கோவிஷீல்ட் இரண்டாவது டோஸ் தடுப்பூசியைச் செலுத்திக்கொள்வதற்கான கால இடைவெளியை 12-16 வாரங்களாக கடந்த மே மாதம் மத்திய அரசு அதிகரித்தது. இந்நிலையில், ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் பேசிய தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநரும், தேசிய நோய்த்தடுப்பு தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் இரண்டு உறுப்பினர்களும், கோவிஷீல்ட் தடுப்பூசிக்கான இடைவெளியை 8-12 வாரங்களாக அதிகரிப்பது குறித்து மட்டுமே ஆலோசனை நடத்தப்பட்டதாகவும், அதுவே பரிந்துரைக்கப்பட்டதாகவும் ஆனால் மத்திய அரசு கோவிஷீல்ட் இரண்டாவது டோஸுக்கான இடைவெளியை 12-16 வாரங்களாக அதிகரித்துவிட்டதாகவும் தெரிவித்தனர்.

இதனால் 12-16 வாரங்களாக கோவிஷீல்ட் தடுப்பூசியைச் செலுத்திக்கொள்வதற்கான இடைவெளி அதிகரிக்கப்பட்டது சர்ச்சையானது. இதனையடுத்து இன்று மத்திய அரசு, 12-16 வாரங்களாக தடுப்பூசி இடைவெளி அதிகரிக்கப்பட்டதற்கு விளக்கம் ஒன்றை அளித்தது. அதில், நோய்த்தடுப்பு தொடர்பான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் கீழ் இயங்கும் கரோனா பணிக்குழு தலைவர் டாக்டர் என்.கே. அரோராவின் அறிக்கையை மத்திய அரசு மேற்கோள் காட்டியிருந்தது.

டாக்டர் என்.கே. அரோரா -வின் அந்த விளக்கத்தில், "அடினோவெக்டர் வகை தடுப்பூசிகளின் செயல்பாடு தொடர்பான அடிப்படை அறிவியல் காரணங்களைக் கொண்டே, 2 கோவிஷீல்ட் டோஸ்களுக்கு இடையிலான இடைவெளியை 4-6 வாரங்களிலிருந்து 12-16 வாரங்களாக அதிகரிக்கும் முடிவு எடுக்கப்பட்டது. இந்த இடைவெளி 12 வாரமாக இருக்கும்போது, தடுப்பூசி செயல்திறன் 65% - 88% வரை வேறுபடுகிறது எனப் பிரிட்டன் சுகாதாரத் துறையின் நிர்வாக அமைப்பான பப்ளிக் 'ஹெல்த் இங்கிலாந்து' வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. தடுப்பூசிக்கான இடைவெளி 12 வாரங்களாக இருந்ததால், ஆல்பா வகை கரோனா பரவலிலிருந்து மீள முடிந்தது. இடைவெளி அதிகரிக்கும்போது, அடினோவெக்டர் தடுப்பூசிகளின் செயல்திறன் அதிகரிக்கிறது என்ற அறிவியல் காரணம் இருந்ததால், இது நல்ல யோசனை என நினைத்தோம்" எனத் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் டாக்டர் என்.கே. அரோரா தற்போது, கோவிஷீல்ட் தடுப்பூசி டோஸ்களுக்கான இடைவெளியை மீண்டும் 4-8 வாரங்களாக மாற்றுவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT