covid waste

உலகையே அச்சுறுத்திவரும் கரோனாதொற்று, இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இந்தியாவில்ஏப்ரல், மே மாதங்களில் வேகமாகப் பரவியகரோனாதொற்று, தற்போது குறைந்துவருகிறது.

Advertisment

இந்தநிலையில், மத்திய மாசுக் கட்டுப்பாட்டுவாரியம் ஒரு புள்ளி விவரத்தைவெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 7 மாதங்களில் இந்தியா, 33000 டன்கரோனாகழிவுகளை உற்பத்திச் செய்துள்ளது. கரோனாகழிவுகள் என்பது, கரோனாகாலத்தில் பயன்படுத்தப்பட்ட முகக் கவசங்கள், படுக்கை விரிப்புகள், ஊசிகள், கையுறைகள் உள்ளிட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

இந்தியாவிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலம் 5,367 டன்கரோனாகழிவுகளை உற்பத்திச் செய்துள்ளது. அதற்கடுத்தடுத்த இடங்களில் கேரளா(33,000 டன்), குஜராத் (3,086டன்) ஆகிய மாநிலங்கள்உள்ளன. தமிழகம் இப்பட்டியலில் நான்காவதுஇடத்தில்உள்ளது. தமிழகம், கடந்த ஏழு மாநிலங்களில்2,086 டன்கரோனாகழிவுகளை உற்பத்திச் செய்துள்ளது.

கரோனாகழிவுகள், அக்டோபர் மாதத்தில்தான் அதிகமாக உற்பத்தியாகியிருக்கின்றன. அம்மாதத்தில் 5,500 டன்கள் கரோனாகழிவுகள் உற்பத்தியாகியிருக்கின்றன என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

Advertisment