COVID

இந்தியாவில் கரோனாவின்இரண்டாவது அலை தற்போது ஏற்பட்டு வருகிறது. மஹாராஷ்ட்ரா, குஜராத், பஞ்சாப், மத்திய பிரதேஷ் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனாவைகட்டுப்படுத்த ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. இருப்பினும் கரோனாபரவல் அதிகரித்து வருகிறது.

Advertisment

மஹாராஷ்ட்ராமாநிலத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 30 ஆயிரத்து 535 பேருக்கு கரோனா உறுதியாகிவுள்ளது. ஒரேநாளில் ஒரு மாநிலத்தில் இத்தனை பேருக்குகரோனாதொற்று உறுதியாகியிருப்பதுஇதுவே முதல்முறையாகும். இதற்கு முன்பு அதிகபட்சமாக, இதே மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் 25 ஆயிரத்திற்கும்மேற்பட்டோருக்கு ஓரேநாளில் கரோனாபரவல் உறுதிசெய்யப்பட்டிருந்தது.

Advertisment

இதேபோல்கடந்த வாரம் (மார்ச் 15 - 21) வரை 2.6 லட்சம் பேர் புதிதாக கரோனாவால்பாதிக்கப்பட்டுள்ளனர். இது இதற்கு முந்தைய வாரத்தைவிட 67 சதவீதம் அதிகமாகும். அந்த வாரத்தில் 1.55 லட்சம் பேருக்கு கரோனாதொற்று ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் வளர்ந்து வரும் கரோனாவின்இரண்டாவது அலையைஉடனடியாக நிறுத்தியாகவேண்டும்என பிரதமர் மோடி ஏற்கனவே மாநில முதல்வர்களிடம் அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.