கரோனா மருந்து... இந்திய நிறுவனத்திற்கு ரூ.1,125 கோடி வழங்கும் பில்கேட்ஸ் அறக்கட்டளை...

covid 19 vaccine may cost 225 rupees in india

இந்தியா உள்ளிட்ட நடுத்தர வருமானம் உள்ள நாடுகளுக்கு கரோனா தடுப்பு மருந்துகளை ரூ.225-க்கு வழங்க முடியும் என சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், இதற்கான தடுப்பூசி கண்டறியும் பணிகள் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்ட் மற்றும் அஸ்ட்ராஜெனேகா மருந்து நிறுவனத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள தடுப்பூசி ஒன்று சோதனைகளை எதிர்பார்த்த முடிவுகளைக் கொடுத்துள்ளது. இந்தத் தடுப்பூசியை மனிதர்களுக்குச் செலுத்தி செய்யப்பட்ட முதல்கட்ட சோதனை வெற்றி பெற்ற சூழலில், விரைவில் இந்த தடுப்பு மருந்து விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த மருந்தினை இந்தியாவில் உற்பத்தி செய்ய உரிமம் பெற்றுள்ள சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனம், தடுப்பூசி நவம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளது. மேலும், இந்தியாவில் மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கும் 2-வது மற்றும் 3-வது கட்டப் பரிசோதனை விரைவில் தொடங்க உள்ளது. இந்நிலையில், இந்தியா உள்ளிட்ட நடுத்தர வருமானம் உள்ள 92 நாடுகளில் உள்ள மக்களுக்கு கரோனா தடுப்பு மருந்து எளிதாக கிடைக்கும் வகையில் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை, சீரம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

இதன்படி இந்தியா உள்ளிட்ட நடுத்தர வருமானம் உள்ள நாடுகளுக்கு கரோனா தடுப்பு மருந்தை 3 டாலர் அதாவது 225 ரூபாய்க்கு வழங்க முடியும். இதற்காக பில்கேட்ஸ் அறக்கட்டளை ரூ.1,125 கோடி வழங்க உள்ளது. இதன் மூலம் 10 கோடி மருந்துகளை நடுத்தர வருமானம் உள்ள நாடுகளுக்கு சீரம் நிறுவனம் வழங்கத் திட்டமிட்டுள்ளது.

corona virus
இதையும் படியுங்கள்
Subscribe