இந்தியாவில் 129 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சூழலில்,கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.

Advertisment

COVID-19 patient passes away at Mumbai Kasturba hospital

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

சீனாவின் வுஹானில் தொடங்கி தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 7,171 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள இந்த கரோனா வைரசால் 1.8 லட்சம் பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இந்தியாவிலும் பரவ ஆரம்பித்துள்ள இந்த வைரஸ் இதுவரை 129 பேரைப் பாதித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவின் மும்பையில் உள்ள கஸ்தூர்பா மருத்துவமனையில் 64 வயதான கரோனா பாதிக்கப்பட்டவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கர்நாடகா மற்றும் டெல்லியில் தலா ஒருவர் உயிரிழந்த நிலையில் தற்போது மும்பையில் ஒருவர் பலியாகியுள்ளார்.

Advertisment