Advertisment

'கோவாக்சின்' தடுப்பு மருந்து சோதனைக்கு இன்று முதல் ஆட்கள் தேர்வு - டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிப்பு!

f

Advertisment

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவி உலகை அச்சுறுத்தி வருகிறது. லட்சகணக்கான மக்கள் இந்நோய் காரணமாக பலியாகியுள்ளனர். உலகம் முழுவதும் பல மருந்து ஆராய்ச்சி நிறுவனங்கள் கரோனாவுக்கான தடுப்பு மருந்தைக் கண்டறியும் முயற்சியில் ஈடுப்பட்டன.

அதில் ரஷ்ய நிறுவனம், சீனா நிறுவனம், அமெரிக்க நிறுவனம் போன்றவை விலங்குகளிடம் அதனைப் பரிசோதனை நடத்திவிட்டு மனிதர்களுக்குப் பரிசோதனை செய்கின்றன. அந்த வரிசையில் இந்தியாவில் உள்ள ஒரு நிறுவனமும் இறங்கியுள்ளது. இந்தியாவில் ஆந்திரா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள மத்திய அரசின் பாரத் பயோடெக் நிறுவனம், கரோனாவுக்கான தடுப்பு மருந்தைக் கண்டறிந்துள்ளது. 'பாரத் கோவாக்சின்' என்கிற பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த மருந்தை பாரத் பயோடெக், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், இந்திய வைரலாஜி துறையின் ஒத்துழைப்புடன் கண்டுபிடிக்கப்பட்டு, இது விலங்குகளுக்குப் பரிசோதனை முறையில் செலுத்தப்பட்டது. இந்த மருந்து நல்ல பலனைத் தருவதாக ஆய்வக முடிவுகள் தெரிவிக்கின்றன.

அதனைத் தொடர்ந்து மனிதர்களிடம் பரிசோதிக்கும் முறைக்கு வந்துள்ளது. இந்தியா முழுவதும் சில முன்னணி, ஆராய்ச்சி மையத்தைக் கொண்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளாக உள்ளவர்களுக்கு இந்த பாரத் கோவாக்சின் என்கிற கரோனா மருந்தைச் செலுத்துவதற்கான அனுமதியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்திடம் இருந்து பாரத் பயோடெக் நிறுவனம் பெற்றுள்ளது. அதன்படி இந்த மருந்தை சில நாட்களுக்கு முன் மூன்று நபர்களுக்கு செலுத்தி சோதனை செய்யப்பட்டது. அதில் அவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் அடுத்த கட்ட முயற்சியாக டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் மனிதர்களுக்கு கோவாக்சின் செலுத்தி பரிசோதிக்க உள்ளனர். இதற்காக விரும்பமுள்ளவர்களை தங்களை அணுகலாம் என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe