covid 19 50.61 lakhs samples tested icmr

நாடு முழுவதும் இன்று (10/06/2020) காலை 09.00 மணிவரை 50,61,332 மாதிரிகள் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது.

Advertisment

அதேபோல் நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1,45,216 மாதிரிகள் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் ஐ.சி.எம்.ஆர். குறிப்பிட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி (09/06/2020) 6,21,171 மாதிரிகள் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் உள்பட பல்வேறு மாநில அரசுகளும் கரோனா பரிசோதனையை அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment