/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/EFCEW.jpg)
இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள் முழுமையான பயன்பாட்டில் உள்ளன. அதேசமயம், கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகால அங்கீகாரம் இன்னும் வழங்கப்படவில்லை. இதனால் கோவாக்சின் செலுத்திக்கொண்டவர்கள் வெளிநாடு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து, கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசரகால அங்கீகாரம் கேட்டு பாரத் பயோடெக் நிறுவனம் விண்ணப்பித்தது. மேலும், கோவாக்சின் தடுப்பூசியின் ஒப்புதலுக்குத் தேவையான தரவுகளைப் பாரத் பயோடெக் நிறுவனம், கடந்த ஜூலை ஒன்பதாம் தேதி சமர்ப்பித்தது. இதனையடுத்து,உலக சுகாதார நிறுவனத்தின் நோயெதிர்ப்பு தொடர்பான நிபுணர்களின் மூலோபாய ஆலோசனைக் குழுவும், தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவும்கூடி கோவாக்சின் தடுப்பூசியை ஆய்வுசெய்தனர். அதனைத்தொடர்ந்து உலக சுகாதார நிறுவனம் கோவாக்சினுக்கு அவசரகால அங்கீகாரத்தை வழங்கியது.
இதற்கிடையே உலக சுகாதார நிறுவனம், கோவாக்சினுக்கு அவசரகால அங்கீகாரம் வழங்குவதைத் தாமதமாக்குவதாககுற்றச்சாட்டும் எழுந்தது. இந்தநிலையில், ஆங்கில ஊடகம் ஒன்றின் ஆண்டு மாநாட்டில் பேசிய பாரத் பயோடெக் தலைவர் கிருஷ்ணா எல்லா, மற்ற தடுப்பூசிகளை விட கோவாக்சின் தடுப்பூசி அதிகம் ஆய்வு செய்யப்பட்டதாகதெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது, “உலக சுகாதார நிறுவனத்தில், மற்ற தடுப்பூசிகளை விட கோவாக்சின் அதிக சோதனைகளை எதிர்கொண்டது. இறுதியில் நாம் வென்றது நல்ல விஷயம்.இது செயல்முறையைப் பற்றியது அல்ல. ஆனால் கோவாக்சின் தடுப்பூசி பற்றி நாட்டில்உள்ள எதிர்மறைவாதிகளால் கூறப்பட்ட பல்வேறு விஷயங்கள் உலக சுகாதார நிறுவனத்தின் மேல் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம். எனவே அவர்கள், தாங்கள் என்ன செய்கிறோம் என்பதில்இருமடங்குஉறுதியாக இருக்க விரும்பினர். தீவிரமாக மதிப்பாய்வு செய்யவும் அவர்கள் விரும்பினர். ஒவ்வொரு சிறிய பிரச்சனையும் அவர்களுக்குப் பெரிய விஷயமாகமாறியது.” இவ்வாறு கிருஷ்ணா எல்லா தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)