/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/dc-std.jpg)
மதுபானங்கள் விற்கும் கிளப்களில் இனி நடனமும் நடத்த அனுமதி தரலாம் என மும்பை மாநகராட்சிக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் மும்பை மாநகராட்சியில் நடன கிளப் தொடங்க உரிமம் வழங்குவது நிறுத்தப்பட்டது. இது சம்பந்தமாக தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்துள்ள உச்சநீதிமன்றம், நடனத்துடன் கூடிய மதுபான விடுதிகளை முற்றிலுமாக தடை விதிப்பது தவறு. அதற்கு பதிலாக அதனை ஒழுங்குபடுத்தி செயல்படுத்த வேண்டும் என கூறியுள்ளது. மேலும் இந்த மாதிரியான விடுதிகள், பள்ளி மற்றும் வழிபாட்டு தலங்களிலிருந்து ஒரு கிலோமீட்டருக்கு அப்பால் இருக்க வேண்டும் எனவும், நடனமாடும் பெண்களுடன் சரியான முறையில் ஒப்பந்தம் கையெழுத்திடவேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)