/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/inve ni_18.jpg)
உத்தரப் பிரதேசம் மாநிலம், மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள சவுக் பகுதியைச் சேர்ந்தவர் உக்ராசென். இவர் கடந்த 2021ஆம் ஆண்டு அப்பகுதியைச் சேர்ந்த18 வயதுக்குட்பட்ட சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதனையடுத்து, இந்தச் சம்பவம் தொடர்பாக சிறுமி, தனது பெற்றோரிடமும் தெரிவித்தார். இதனைக் கேட்டுஅதிர்ச்சியடைந்த பெற்றோர், இந்தச் சம்பவம் குறித்து போலீசிடம் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் பேரில், சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த உக்ராசென் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு, மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இந்த வழக்கில் இன்று (04-05-24) நீதிபதி தீர்ப்பளித்தார். அதில், கடந்த 2021ஆம் ஆண்டின் போது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக உக்ராசெனுக்கு 20 ஆண்டுகள்சிறைத் தண்டனையும், ரூ.9,000 விதித்து நீதிபதி தீர்ப்பளித்து உத்தரவிட்டார்.
Follow Us