ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை; நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Court orders two years imprisonment for Rahul Gandhi

பிரதமர் மோடி பெயர் குறித்து அவதூறாகப்பேசியதாகத்தொடரப்பட்ட வழக்கில் ராகுல்காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து குஜராத் சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின்முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி கடந்த 2019 ஆம் ஆண்டுகர்நாடகாவில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில், ‘மோடி என்று பெயர் வைத்தவர்கள்எல்லாம் எப்படி திருடர்களாக இருக்கிறார்கள்’என்ற வகையில் பேசியிருந்ததாகக் கூறி பாஜகவை சேர்ந்த எம்.எல்.ஏவும், முன்னாள் அமைச்சரௌமான பூர்னேஷ் மோடி குஜராத் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கின் விசாரணை இன்று மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போதுராகுல்காந்தி நேரில் ஆஜராகி இருந்தார். ராகுல்காந்தியின் பேச்சுமோடி சமூகத்தினரை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாக எதிர்த்தரப்பினர் வாதங்களை முன்வைத்தனர். இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி இந்த வழக்கில் ராகுல்காந்தியைக் குற்றவாளியாக அறிவித்து அவருக்கு க்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டார்.

மேலும், இந்தத் தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி மேல்முறையீடு செய்துகொள்ள அவருக்கு உடனடியாக பிணைவழங்கியும்உத்தரவிடப்பட்டுள்ளது.

congress
இதையும் படியுங்கள்
Subscribe