Skip to main content

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்திக் சிதம்பரம் ஆஜராக உத்தரவு...

Published on 30/01/2019 | Edited on 30/01/2019

 

jmyhjhg

 

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 28 ஆம் தேதி கார்த்திக் சிதம்பரம் வெளிநாடுகளுக்கு செல்ல தடை இல்லை என நீதிமன்றம் அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி பிப்ரவரி 20 முதல் 28 ஆம் தேதி வரை அவர் வெளிநாட்டிற்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் பிப்ரவரி 5,6,7, மற்றும் 12 ஆம் தேதிகளில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எந்த முகத்தை வைத்துக்கொண்டு வருகிறார் மோடி' - முதல்வர் மு.க.ஸ்டாலின் பரப்புரை

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
'Which face is Modi coming with'- CM Stalin's lobbying

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மதுரையின் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன், சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம் ஆகியோரை ஆதரித்து மதுரை ரிங் ரோடு பகுதியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். கூட்டத்தில் முதல்வர் பேசுகையில், ''சு.வெங்கடேசனையும், கார்த்தி சிதம்பரத்தையும் மீண்டும் இரண்டாவது முறையாக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க தயாராகி விட்டீர்களா? நீங்கள் வாக்களிப்பது மட்டுமல்ல ஸ்டாலினின் தூதுவனாக உங்கள் பகுதியில் இருக்கக்கூடிய மக்களிடையே இந்தியா கூட்டணிக்கு வாக்கு கேட்க வேண்டும். தமிழ் மக்கள் மீது உண்மையான பாசம் கொண்டவராக இந்தியா கூட்டணியின் பிரதமர் ஆட்சி செய்வார்.

இன்னும் ஒரே வரியில் சொன்னால் இப்பொழுது இருக்கக்கூடிய பிரதமர் மாதிரி நிச்சயம் இருக்க மாட்டார். பத்தாண்டு காலமாக தமிழ்நாட்டுக்கு எந்தச் சிறப்பு திட்டத்தையும் செய்து கொடுக்காத பிரதமர் மோடி இப்பொழுது வாக்கு கேட்டு தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறார். தமிழ்நாட்டுக்கு சிறப்பு திட்டங்களை செய்துவிட்டு வந்திருக்கிறாரா? இல்லை. பக்கத்து மாவட்டங்களில் வெள்ளத்தால் தவிச்சாங்களே அவர்களுக்கு உதவி செய்துவிட்டு வந்தாரா? இல்லை. எந்த முகத்தோடு மோடி தமிழ்நாட்டுக்கு வருகிறார். இவர் தமிழ்நாட்டை மட்டும் இப்படி வஞ்சிக்கவில்லை. எதிர்க்கட்சி ஆளுகின்ற எல்லா மாநிலங்களையும் வஞ்சிக்கிறார்.

பக்கத்து மாநிலம் கேரளாவில் மக்கள் நலத்திட்டங்களுக்கு கடன் வாங்கக்கூட உச்சநீதிமன்றத்திற்கு போகின்ற நிலையை உருவாக்கி இருக்கிறார். மோடி கர்நாடகா வறட்சி நிவாரணம் கேட்டு உச்ச நீதிமன்ற கதவுகளை தட்டி இருக்கிறது. அது மட்டுமல்ல அந்த ரெண்டு மாநில முதலமைச்சர்களும் டெல்லி சாலையில் போராடுகின்ற அவலநிலையை உருவாக்கி இருக்கிறார் பிரதமர். மேற்கு வங்கத்திற்கும் இதேநிலைமைதான். மகாராஷ்டிராவில் என்ன நடக்கிறது குதிரை பேரம் நடத்தி, எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியைக் கலைத்தார். ஆளுங்கட்சியை உடைத்து இப்பொழுது அந்த மாநிலத்தையும் நாசமாக்கி விட்டார்கள். அடுத்து ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடியின முதலமைச்சரை கைது செய்துள்ளார். டெல்லி, பஞ்சாபிலும்  ஆம் ஆத்மி கட்சிக்கு ஆளுநர்களை வைத்து தொல்லை கொடுத்தார்கள். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்துள்ளார்கள். எதிர்க்கட்சி ஆளுகின்ற மாநிலங்களில் மட்டும் இ.டி, ஐ.டி, சிபிஐ, மற்றும் கவர்னர்களை வைத்து தொல்லை கொடுப்பார். இதுதான் மோடி இந்தியா'' என்றார்.

Next Story

உதயநிதி தொகுதியில் கார்த்தி சிதம்பரம்! - காங்கிரஸ் அலப்பறை!

Published on 17/11/2023 | Edited on 17/11/2023

 

Karti Chidambaram Birthday posters in Udhayanidhi Constituency

 

தமிழக காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை எம்.பி.யும், மூத்த தலைவர் ப. சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரம், நேற்று (நவம்பர் 16 ஆம் தேதி) தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதற்காக அவரை வாழ்த்தி அவரது ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டர்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக திமுக இளைஞரணியினரை கொந்தளிக்க வைத்துள்ளது.

 

கார்த்தி சிதம்பரத்திற்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லும் விதமாக, 'தமிழகத்தின் நாளைய முதல்வர்' என்று அவரது ஆதரவாளர்கள் சென்னையில் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். அதுவும் திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் தொகுதியான சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

 

திமுகவை வம்புக்கு இழுக்க, திட்டமிட்டே இந்த போஸ்டர்களை கார்த்தி ஆதரவாளர்கள் ஒட்டியிருப்பதாக திமுகவுக்கு காங்கிரசிலிருந்தே தகவல் போயிருக்கிறது. உதயநிதி தொகுதியில் இந்த போஸ்டர்களை கண்ட அத்தொகுதியின் திமுகவினரிடமும் திமுக இளைஞரணியிடமும் கோபத்தை ஏற்படுத்தி வருகிறது. 

 

திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருந்து வரும் நிலையில், கூட்டணிக்குள் குழப்பத்தை உருவாக்குகிறார்கள் என்று திமுகவினரும் காங்கிரசில் உள்ள சிதம்பரம் எதிர்ப்பாளர்களும் அதிருப்தியடைந்துள்ளனர். இந்த நிலையில், இந்த விவகாரத்தை அறிந்த காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியின் ஆதரவாளர்கள் சிலர், காங்கிரசின் அகில இந்திய தலைமையின் கவனத்துக்கு இந்த போஸ்டர் விவகாரத்தை கொண்டு சென்றிருப்பதுடன், "இந்த போஸ்டர் விசயத்தை திமுக ரசிக்கவில்லை. திமுக - காங்கிரஸ் கூட்டணியில் பிரச்சனையை உருவாக்குவதற்காகவே கார்த்தி சிதம்பரம் தரப்பினர் இந்த கலாட்டாவை ஆரம்பித்துள்ளனர். இதனை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும்" என்றும் தலைமையிடம் சொல்லியிருக்கிறார்களாம்.