Advertisment

5 பேருக்கு மரண தண்டனை; 2021இல் நடந்த கொடூர வழக்கில் அதிரடி தீர்ப்பு!

Court ordered sentences 5 member for girl incident

Advertisment

சத்தீஸ்கர் மாநிலம், கோர்பா மாவட்டம், கது பிரோடா கிராமத்தைச் சேர்ந்தவர் சந்த்ராம் மஞ்ச்வார் (49). இவரிடம், பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவர் தனது குடும்பத்துடன் ஆடு, மாடு மேய்க்கும் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு முதியவரும், குடும்பத்தினரும் காணாமல் போனதாக முதியவரின் மகன் லெம்ரு காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதன்படி, முதியவர் வேலை பார்த்த சந்த்ராமிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், பல அதிர்ச்சிகரமான தகவல் கிடைத்தது. முதியவரின் குடும்பத்தில் உள்ள 16 வயது சிறுமியை தனக்கு 2வது திருமணம் செய்து வைக்குமாறு சந்த்ராம் முதியவரிடம் விருப்பம் தெரிவித்துள்ளார். அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த சந்த்ராம் கடந்த 2021 ஜனவரி 29ஆம் தேதி தனது கூட்டாளிகள் 5 பேருடன் சேர்ந்து, முதியவரையும் அவரது 4 வயது பேத்தியையும் கொலை செய்துவிட்டு 16 வயது சிறுமியை கடத்திச் சென்றுள்ளார்.

அந்த சிறுமியை காட்டுப்பகுதிக்கு இழுத்துச் சென்ற சந்த்ராம் மற்றும் அவரது கூட்டாளிகள், அவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கல்லால் அடித்து கொடூரமாகச் செய்துள்ளனர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, சந்த்ராம் மஞ்ச்வார் உள்ளிட்ட 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு கோர்பா மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

Advertisment

இந்த நிலையில், கூடுதல் அமர்வு நீதிபதி மம்தா போஜ்வானி முன்பு நேற்று (22-01-25) விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றவாளிகளான சந்த்ராம் மஞ்ஜ்வார், அப்துல் ஜப்பார் (34), அனில் சார்த்தி (24), பர்தேஷி ராம் (39)ம் ஆனந்த் பனிகா (29) ஆகிய ஐந்து பேருக்கும் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது. மற்றொரு குற்றவாளியான உமாசங்கர் யாதவ் (26) என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

chhattisgarh highcourt sentenced
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe