Court ordered to file a case against Chief Minister Siddaramaiah

மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் நில ஒதுக்கீடு செய்ததில் 4000 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாகவும், இதற்கு பொறுப்பேற்று கர்நாடக முதல்வர் சித்தராமையா பதவி விலக வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. அதோடு சித்தராமையாவின் மனைவி பேரில் 14 வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. மூடா மோசடி வழக்கு என அழைக்கப்படும் இந்த விவகாரம் கர்நாடகா அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இத்தகைய சூழலில் தான் ஊழல் தடுப்புச் சட்டம் 1998 சட்டத்தில் 17வது பிரிவு மற்றும் புதிதாக தற்பொழுது அமலுக்கு வந்திருக்கும் பாரதிய நாகரிக் சுரக் ஷா சம்ஹிதா வழக்கின் சட்டப் பிரிவின் 218வது பிரிவு என இந்த இரண்டு பிரிவுகளின் கீழ் சித்தராமையாவை விசாரிக்க அம்மாநிலத்தின் ஆளுநர் தாவர் சந்த் கெலாட் அனுமதி வழங்கி இருந்தார்.

Advertisment

அதே சமயம் ஆளுநர் பாஜகவின் அழுத்தத்தாலும், மத்திய அரசின் அழுத்தத்தாலும் செயல்பட்டு இவ்வாறு செயல்பட்டு வருகிறார் எனக் காங்கிரஸ் குற்றச்சாட்டு தெரிவித்திருந்து. அதனைத் தொடர்ந்து சித்தராமையாவை விசாரிக்க ஆளுநர் அனுமதி அளித்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தை அவர் நாடி இருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் இந்த முறைகேடு வழக்கில் முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கர்நாடக உயர்நீதிமன்றம் சிறப்பு நீதிமன்றத்திற்கு இடைக்காலத் தடை விதித்திருந்தது. இதனையடுத்து இந்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்த 12ஆம் தேதியுடன் விசாரணை நிறைவடைந்தது. இதன் தொடர்ச்சியாக இந்த வழக்கு நீதிபதி நாகபிரசன்னா அமர்வில் நேற்று (24.09.2024) தீர்ப்பு வழங்கப்பட்டது.

Advertisment

Court ordered to file a case against Chief Minister Siddaramaiah

அதில், “ஆளுநர் சட்டத்திற்குட்பட்டு தான் அனுமதி வழங்கியுள்ளார். எனவே ஏற்கனவே மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்றம் வழங்கிய இடைக்காலத் தடை உத்தரவும் நீக்கப்படுகிறது” எனத் தெரிவித்து சித்தராமையாவின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து நீதிமன்றத்தின் உத்தரவு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று (25.09.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது முடா வழக்கில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய லோக் ஆயுக்தா போலீசாருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அந்த உத்தரவில் 3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.