Advertisment

ஆகஸ்ட் 30க்குள் சரணடைய வேண்டும்;லாலு பிரசாத்திற்கு நீதிமன்றம் உத்தரவு!!

 Court to order Lalu Prasad to surrender by August 30

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பீகார் மாநில முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ், தனது ஆட்சிக்காலத்தில் மாட்டுத்தீவண ஊழல் வழக்கில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டார். இதுதொடர்பான வழக்குகளில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என தீர்ப்பளித்தது.

இதையடுத்து, லாலு பிரசாத் யாதவ் பிர்சா முண்டா சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையில் உடல்நிலைக் கோளாறு காரணமாக ரிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து கிளம்பிய நிலையில், வரும் மே 12ஆம் தேதி தனது மகனின் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக மூன்று நாள் பரோல் வழங்கியது சிறை நிர்வாகம்.

Advertisment

அதனை அடுத்துஅவரது உடல்நிலை குன்றியதன்காரணமாக சிகிச்சை பெறலாலுவுக்கு ஆறு வாரங்கள் அதாவது ஆகஸ்ட் 14 தேதிவரைநிபந்தனை ஜாமீன் வழங்கி ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும் ஜாமின் நீட்டிப்பு கேட்டு அவர் கொடுத்த மனுவை கடந்த 10-ஆம் தேதி விசாரித்த நீதிமன்றம் ஆகஸ்ட் 20 தேதிவரை ஜாமீனை நீட்டித்தது. மீண்டும் ஜாமின் நீடிப்பு கேட்டுஅவர் மனுதாக்கல் செய்தார் இதனால் அவருக்கு ஆகஸ்ட் 27-ஆம் தேதி வரை நீட்டிப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில் அவரது உடல்நிலையை காரணம் காட்டி தனக்கு மூன்று மாதம் ஜாமீன் வேண்டுமென அவர் மனுதாக்கல் செய்த நிலையில் அந்த கோரிக்கையைஏற்று மறுத்த ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் ஆகஸ்ட் 30 தேதிக்குள் சரணடைய வேண்டும் என உத்தரவிட்டுளள்ளது.

jail highcourt Lalu prasad yadhav
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe