The court gave a different sentence for The person who insulted India

மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ஃபைசல். இவர், காலிஸ்தான் பிரிவினைக்கும், பாகிஸ்தானுக்கும் ஆதரவாக கூச்சலிட்டு இந்தியாவை அவமதித்து பேசியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக, மத்தியப் பிரதேச காவல்துறையினர் ஃபைசல் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Advertisment

இது தொடர்பான வழக்கு விசாரணை மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத்தில் வந்தது. அப்போது, ஃபைசலுக்கு வித்தியாசமான நிபந்தனையை விதித்து அவருக்கு பிணை வழங்கியுள்ளது. அதில், இந்தியாவின் தேசியக் கொடியை பார்த்து ‘பாரத் மாதா கி ஜெய்’ என்று முழக்கமிட்டபடியே 21 முறை சல்யூட் அடிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்து பிணை வழங்கியுள்ளது. மேலும், பிணையில் உள்ள காலத்தில் முதல் மற்றும் கடைசி செவ்வாய் கிழமைகளில் காவல் நிலையத்தில் ஆஜராகி இந்த நிபந்தனையை கடைபிடிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

Advertisment