Advertisment

கோரிக்கையை மறுத்த நீதிமன்றம்... ஆர்யன்கானுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு!   

Court extends custody of Aryan Khan

கடந்த அக்.02 அன்றுமும்பையில்,கோவா செல்லக்கூடிய சொகுசுக் கப்பல் ஒன்றில்பார்ட்டிநடைபெற்றது.அங்குதடைசெய்யப்பட்டபோதைப் பொருட்களுடன்பார்ட்டிநடைபெற்றதாகத்தகவல் கசிய,பார்ட்டியில்பங்கேற்றவர்களைக் கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதன் அடிப்படையில், அக்.03 அன்று காலை பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகனானஆர்யன்கானைபோதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

Advertisment

அதனைத் தொடர்ந்துகைது செய்யப்பட்டஆர்யன்கான்உள்ளிட்ட 8 பேரும் மும்பை விசாரணை நீதிமன்றத்தில் கடந்த 4 ஆம் தேதிஆஜர்படுத்தப்பட்டநிலையில்,அக்.7 ஆம்தேதி வரை நீதிமன்ற காவல் பிறப்பிக்கப்பட்டு உரியவர்களிடம் விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஆர்யன்கானுக்குஇன்று ஜாமீன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்டவர்களின் என்.சி.பி காவலை அக்.11 வரை நீட்டிக்க வேண்டும் என போதைப்பொருள்தடுப்பு துறையினர் நீதிபதியிடம்கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவருக்கும் (ஆர்யன்கான்உள்ளிட்ட) 14 நாட்கள் நீதிமன்ற காவலைநீட்டித்து மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அதேபோல் இந்த வழக்கில் ஜாமீன்கோரிய ஆர்யன்கானின்மனுவைநாளை மும்பை நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.

Advertisment

Mumbai sharukh khan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe