ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் அந்நிய நேரடி முதலீட்டை பெற்றதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகளால் கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட ப.சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது.
எனினும், ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அதனடிப்படையில், அமலாக்கத்துறையினர் பிடியில் டெல்லி திகார் சிறையில் சிதம்பரம் அடைக்கப்பட்டுள்ளார். அமலாக்கத்துறை வழக்கில் தனக்கு ஜாமின் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிதம்பரம் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இதனிடையே சிதம்பரத்தின் காவல் முடிவடைந்ததையடுத்து டெல்லி திகார் சிறையில் இருந்து கானொளி காட்சி மூலம் ப.சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, சிதம்பரத்தின் காவலை 14 நாட்கள் நீட்டிக்க அமலாக்கத்துறை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தில் காவல் வருகிற 27ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)