Advertisment

குழந்தையுடன் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்த தம்பதி!

The couple who survived happily with the baby!

Advertisment

புதுச்சேரியில் இரு சக்கர வாகனத்தில் குழந்தையுடன் சென்ற தம்பதியினர், இரண்டு பேருந்துகளுக்கு இடையே சிக்கி நூலிழையில் உயிர் பிழைத்த சம்பவத்தின் காட்சி வெளியாகியுள்ளது.

கல்மண்டபம் என்ற கிராமத்தில் புதுச்சேரி நோக்கி சென்ற பேருந்தை இரு சக்கர வாகனத்துடன் தனது குடும்பத்துடன் சென்ற நபர் முந்தி சென்றார். அப்போது, எதிர்திசையில் மற்றொரு பேருந்து வந்துள்ளது. இதனால் செய்வதறியாது திகைத்த அந்த நபர், இரண்டு பேருந்துகளுக்கும் இடையே இரு சக்கர வாகனத்தை நிறுத்தினார். அப்போது, பேருந்துகளில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், குழந்தையுடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற தம்பதியினர், நூலிழையில் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

இது தொடர்பான பதற வைக்கும் வீடியோகாட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

video incident bus Puducherry
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe