காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவிக்காததால் காதல் ஜோடி 270 அடி உயரத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

pair

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பாப்பினஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் கமல்குமார் (வயது 24). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த அஸ்வதி (வயது 20) என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.

Advertisment

இதனை அறிந்த இருவீட்டாரும் காதல் ஜோடியை அழைத்து பிரிந்துவிடுமாறு வற்புறுத்தியுள்ளனர். இருப்பினும் இருவரும் ஒருவரையொருவர் விட்டுப் பிரிய விரும்பாத நிலையில், மனமுடைந்த காதல் ஜோடி வெறுப்படைந்து வீட்டைவிட்டு வெளியேறியுள்ளது.

இந்நிலையில், பாப்பினஞ்சேரி அருகில் உள்ள சுற்றுலாத் தலமான செசிப்பாறா பகுதிக்கு சென்ற காதல் ஜோடி, அங்குள்ள 270 அடி உயர குன்றின் மேல் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ளது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.

Advertisment

இதுவொருபுறம் இருக்க, அஸ்வதியை காணவில்லை என அவரது வீட்டார் காவல்நிலையத்தில் புகாரளித்திருந்தனர். இந்தப் புகாரை விசாரித்து வந்த காவல்துறை, செசிபாறா பகுதியில் கமல்குமாரின் இருசக்கர வாகனம் இருப்பதைக் கண்டு அங்கு நடத்திய சோதனையில், காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்துள்ளது. தற்போது, இருவரின் உடலும் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.