
கோவா மாநிலத்தில் 5 வயது பெண் குழந்தை ஒன்று காணாமல் போனதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். சிறுமி சென்ற இடங்களில் எல்லாம் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அந்த சிசிடிவி கேமரா காட்சிகளில், சிறுமி ஒரு வீட்டிற்குள் நுழைந்து அதன் பின்பு வெளியே வராமல் இருந்துள்ளது. இதில் சந்தேகமடைந்த போலீசார், வீட்டின் உரிமையாளரான அலார் (52) மற்றும் அவரது மனைவி பூஜா (45) ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல் கிடைத்தது.
வீட்டில் இருக்கும் பிரச்சனை தீர வேண்டுமென்றால் 5 வயது பெண் குழந்தை ஒன்றை பலி கொடுக்க வேண்டும் என்று மந்திரவாதி ஒருவர், இந்த தம்பதியிடம் கூறியுள்ளார். இதனை நம்பிய அந்த தம்பதி, 5 வயது சிறுமியை கொன்று பலி கொடுத்துவிட்டு வீட்டின் பின்புறத்தில் புதைத்துள்ளனர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.