/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/train-ni.jpg)
உத்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள மனிகாபூரில் இருந்து டெல்லி நிஜாமூதின் வரை செல்லும் சம்பர்கிராண்டி எக்ஸ்பிரஸ் ரயில்வே இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலின் ஏ.சி. பெட்டியில் வயதான தம்பதியர் பயணித்து வந்துள்ளனர். அதே பெட்டியில், 19 வயது கொண்ட ஒரு வாலிபரும் பயணித்து வந்துள்ளார்.
அப்போது, மதுபோதையில் பயணித்த அந்த வாலிபர், அந்த தம்பதியர் மீதும், அவர்கள் கொண்டு வந்த பெட்டிகள் மீதும் சிறுநீர் கழித்துள்ளார். இதனைக் கண்ட அந்த தம்பதியர் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து சத்தம் போட்டு டிக்கெட் பரிசோதகருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த, டிக்கெட் பரிசோதகரும் ஜான்சியில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து, ஜான்சி ரயில் நிலையத்திற்குரயில் வந்தது. அங்கு ரெயில்வே காவல்துறையினர், இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தயாராக இருந்தனர்.
அதனை தொடர்ந்து, அந்த வாலிபரை ரயிலில் இருந்து கீழே இறக்கி ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அவர்கள் நடத்திய அந்த விசாரணையில், மதுபோதையில் இருந்த அந்த வாலிபரின் பெயர் ரித்தேஷ் என்றும், அவர் டெல்லியை சேர்ந்தவர் என்பதும் காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து, அவர் ரயில்வே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டார். மேலும், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதமும் விதிக்கப்பட்டது. ரயில் பயணிகள் மீது இளைஞர் ஒருவர் சிறுநீர் கழித்த சம்பவம் ரயில் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)