மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர்-பிலாஸ்பூர் இடையே வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், இன்று இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் மோடி கொடியசைத்து ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார். இது நாட்டின் ஆறாவது வந்தே பாரத் ரயில் சேவை என்பது குறிப்பிடத்தகுந்தது.