yogi adityanath

Advertisment

உத்தரப்பிரதேச சட்டமன்றத்தின் கடைசி அமர்வில், நேற்று யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு நேற்று இரண்டாவது துணை பட்ஜெட்டை தாக்கல் செய்தது. அப்போது பேசியயோகி ஆதித்யநாத், நாட்டிற்கு ராம ராஜ்யமேதேவை என கூறியுள்ளார்.

இதுதொடர்பாகஅவர் கூறியுள்ளதாவது; சோசலிசம் என்பது மிகப்பெரிய மூடநம்பிக்கை. இது குடும்ப சோசலிசம், மாஃபியா சோசலிசம், அராஜகவாத சோசலிசம், கலக சோசலிசம் மற்றும் பயங்கரவாத சோசலிசம் போன்ற பல போலி முத்திரைகளைக் கொண்டுள்ளது. சோசலிசம் என்பது ஒரு ரெட் அலர்ட் என்று மாநில மக்கள் நம்பத் தொடங்கியுள்ளனர். சோசலிசதிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

இந்த நாட்டிற்கு கம்யூனிசமோ சோசலிசமோ தேவையில்லை என்று நாங்கள் ஏற்கனவே கூறியுள்ளோம். இந்த நாடு ராமராஜ்ஜியத்தை மட்டுமே விரும்புகிறது. உத்தரபிரதேசத்திற்கு ராமராஜ்ஜியத்தை மட்டுமே விரும்புகிறது. ராமராஜ்யம் என்பது நிலைத்திருப்பது, உலகளாவியது. எந்த சூழ்நிலையாலும்பாதிக்கப்படாதது. இவ்வாறு யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.