Advertisment

தொடங்கியது கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை

Counting of votes for Karnataka assembly election has started

கர்நாடகாவில் 224 தொகுதிகளைக் கொண்ட சட்டப்பேரவைக்கு மே 10, 2023 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. ஆட்சியிலிருக்கும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் மும்முனை போட்டியில் உள்ளன.

Advertisment

ஆண் வேட்பாளர்கள் 2430 பேர், பெண் வேட்பாளர்கள் 185 பேர் என மொத்தம் 2,615 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். மொத்தமுள்ள 224 தொகுதிகளில் பாஜக 224 தொகுதிகளிலும், காங்கிரஸ் 223 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 207 தொகுதிகளிலும் போட்டியிட்டுள்ளன .நடந்து முடிந்த தேர்தலில் 73.19 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி இருந்தது.

Advertisment

இந்நிலையில் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை துவங்கியுள்ளது. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வாக்கு எண்ணிக்கை மையங்களில் கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தேர்தலுக்குப் பிந்தைய சில கருத்துக்கணிப்புகளில் தொங்கு சட்டப்பேரவை அமைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியான நிலையில் பாஜக மற்றும் காங்கிரசுக்கு பெரும்பான்மை கிடைக்காவிடில் மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

வாக்கு எண்ணிக்கைக்காக 36 மையங்களில்உள்ள 306 அறைகளில் 4,256 மேஜைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதுமாக சுமார் ஒரு மணி நேரத்திற்குள் பதிவான தபால் வாக்குகள் எண்ணப்பட இருக்கிறது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே தற்போது வாக்கு எண்ணிக்கை பணியானது துவங்கியுள்ளது. ஒவ்வொரு தொகுதிக்கும் 14 முதல் 28 சுற்றுகள் வரை வாக்குகள் எண்ணப்பட இருக்கிறது. 8,000க்கும் மேற்பட்ட அதிகாரிகள் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபட்டுள்ளனர்.

results karnataka
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe