Advertisment

தொடங்கியது நான்கு மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை

 Counting of votes for four state assembly elections has begun

தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் தேர்தல் தேதியை கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி அன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து பல கட்டமாக தேர்தல்கள் நடந்து முடிந்தது.

Advertisment

தொடர்ந்து தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகி இருந்தது. இந்நிலையில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற இருக்கிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்குவதையொட்டி வாக்கு எண்ணும் மையங்களில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Advertisment

வடகிழக்கு மாநிலமான மிசோரமில் மட்டும் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை அங்கு தேவாலயங்களில் வழிபாடு நடக்கும் என்பதால் வாக்கு எண்ணிக்கை தேதியை மாற்ற கோரிக்கைகள் எழுந்தது. அதனைத்தொடர்ந்து மிசோரமில் மட்டும் வாக்கு எண்ணிக்கையானது நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் எதிர்பார்ப்புகளை கிளப்பியுள்ளது. இந்நிலையில் தற்போது வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.

telungana Rajasthan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe