Advertisment

அடிபம்பில் கள்ளச்சாராயம்... அதிர்ந்த போலீசார்

 Counterfeit liquor at Adipump... Shocked police

கள்ளச்சாராயத்தை பெரிய பாத்திரங்களில், ட்ரம்களில், ஏன் கண்டெய்னரில் கூட பதுக்கிவைத்திருப்பதை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அடி பம்பில் கள்ளச்சாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.

Advertisment

 Counterfeit liquor at Adipump... Shocked police

மத்திய பிரதேசம் மாநிலம்ஜன்சோதாகிராமத்தில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. புகாரை அடுத்து அந்தப் பகுதிக்குச் சென்ற போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர் .அப்பொழுது சம்பந்தமே இல்லாமல் ஒரு இடத்தில் இருந்தஅடிபம்பை பயன்படுத்தி பார்த்தனர். அதில் நீர் வந்த நிலையில் கலங்கலாக இருந்த அந்த நீரை சாதாரண நீர் என்று போலீசார் நினைத்தனர். ஆனால் தொடர்ந்து அடிபம்பை அடித்த பொழுது அதிலிருந்து வருவது கள்ளச்சாராயம் என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த அடிப்பம்பிற்கு கீழே தோண்டி பார்த்தபொழுதுஏழடி ஆழத்தில் டேங்கில் கள்ளச்சாராயம்பதுக்கி வைக்கப்பட்டு தேவைப்படும்போது அடிப்பம்பில் அடித்து பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பான வீடியோ காட்சிகளும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

police MadhyaPradesh
Show comments
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe