gngfngfngfn

Advertisment

புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14 ஆம் தேதி நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து, இன்று அதிகாலை இந்திய பாதுகாப்படையினர், பதில் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படைக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையிலான இந்த துப்பாக்கிச் சண்டையில் ராணுவ மேஜர் உள்பட 4 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 3 தீவிரவாதிகள் உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. புல்வாமா மாவட்டம் பிங்லான் கிராமத்தில் தாக்குதல் நடத்த துணைபுரிந்த தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக இந்திய சிஆர்பிஎப் வீரர்களுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து இன்று அதிகாலை அந்த கிராமத்தை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தினர். இதற்கு தீவிரவாதிகள் நடத்திய பதில் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 4 பேர் பலியாகியுள்ளனர் எனவும் 3 தீவிரவாதிகள் உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளன எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.