Advertisment

கோடை காலம்... அயோத்தி ராமருக்கு பருத்தி ஆடை!

Cotton clothes for Ayodhya Ram

Advertisment

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் 2,000 கோடி மதிப்பில் மிகப் பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலுக்காக ஒதுக்கப்பட்ட 70 ஏக்கர் நிலத்தில் 2.7 ஏக்கர் நிலத்தில் மட்டுமே ராமர் கோவில் கட்டப்பட்டது. இதனையடுத்து பிரதமர் மோடி தலைமையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற்றது.

அப்போது நடைபெற்ற சிறப்பு பூஜைக்கு பின்பு, குழந்தை ராமர் சிலை கண் திறக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. குழந்தை ராமருக்கு பிரதமர் மோடி முதல் பூஜை செய்து தீபாராதனை காட்டி வழிபாடு செய்தார். இதனையடுத்து கோவில் கருவறை திரைச்சீலை விலக்கப்பட்டு மக்கள் பார்வைக்குத் திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுமக்கள், பக்தர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் ராமரை வழிபாடு செய்து வருகின்றனர்.

கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதிகாலை 4 மணிக்கு பூஜைகள் தொடங்கப்பட்டு, பக்தர்களுக்கான பொது தரிசன நேரம் காலை 6 மணியில் இருந்து இரவு 10 மணி வரை நீடிக்கப்பட்டது. இந்த நிலையில், ராமர் சிலைக்கு பருத்திஆடை அணிவிக்கப்படும் என ராம ஜென்மபூமி தீர்த்த சேத்திர அறக்கட்டளை அறிவித்துள்ளது. கோடை காலத்தையொட்டி அயோத்தி ராமர் சிலைக்கு இன்று முதல் பருத்தி ஆடை அணிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இயற்கை வண்ணம் பூசப்பட்ட கைகளால் நெய்த ஆடைகளை ராமருக்கு அணுவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Advertisment

தற்போது நாடு முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதனால், கோடை காலம் தொடங்கி வெப்பநிலை அதிகரித்துள்ளதால், அயோத்தி ராமருக்கு இன்று முதல் பருத்தி உடை அணிவிக்கப்படும் என்று ராம ஜென்மபூமி தீர்த்த சேத்திர அறக்கட்டளை அறிவித்துள்ளது.

AYOTHYA
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe