5 மாநில தேர்தல் முடிவுகள் பா.ஜ.க வுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக கருதப்படும் இந்த நிலையில் மோடியை பிராதானமாக வைத்து ஆன்லைன் கேம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் கரப்ட் மோடி என்று எழுதப்பட்ட 24 கார்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அதில் திறந்துவைக்கப்பட்டுள்ள 12 கார்டுகளில் மோடியின் ஊழல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. மீதமுள்ள 12 கார்டுகள் மூடிவைக்கப்பட்டு அதிலும் அந்த ஊழல்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றை சரியாக நியாபகத்தில் வைத்து ஊழல் பட்டியலின் ஜோடி கார்டை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். அவ்வாறு அனைத்து கார்டுகளை நாம் சரியாக பொருத்தினால், நாம் வெற்றியாளராக அறிவிக்கப்படுவோம். மேலும் நாம் வெற்றி பெற்றதை ஃபேஸ்புக், வாட்சப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தும் கொள்ளலாம். இது தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த கேம் உள்ள வெப்சைட்டினை காங்கிரஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.