சீனாவில் ஹவுன் மாகாணம் முழுவதும் கரோனா வைரஸ் பிடியில் சிக்கி பெரும் அழிவை சந்தித்து வருகின்றது. கொரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவை தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தோற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

Advertisment

இந்நிலையில், இந்த வைரஸ் தாக்குதலால் இதுவரை 60,000-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1500-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வடகொரியாவில் வைரஸ் பாதித்த ஒருவரை தனிமைப்படுத்தி வைத்திருந்ததாகவும், அவர் அதனை மீறி வெளியிடங்களுக்கு சென்றதால் அவரை ராணுவம் சுட்டுக்கொன்றதாகவும் தகவல் வெளியாகியது. இந்த செய்தி வைரல் ஆன நிலையில் இதனை ராணுவம் மறுத்துள்ளது. ஆனால், ஏற்கனவே பல்வேறு நபர்களை ராணுவம் சுட்டு கொன்றுள்ள சம்பவம் நடந்துள்ளதால் ராணுவம் உண்மையை மறுப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.