Skip to main content

"கரோனா நமது மிகப்பெரிய எதிரி"- பிரதமர் நரேந்திர மோடி உரை!

Published on 07/06/2021 | Edited on 07/06/2021

 

coronavirus vaccines pm narendra modi national addressing

இந்தியா முழுவதும் கரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் இன்று (07/06/2021) மாலை 05.00 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

 

அப்போது பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது, "உலகில் பெரும்பாலான நாடுகள் கரோனா பெருந்தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. 100 ஆண்டுகளில் இல்லாத அளவில் மிகப்பெரும் தொற்று மக்களைப் பாதித்துள்ளது. கரோனாவால் நம்மில் பலர் அன்பிற்குரியவர்களை இழந்திருக்கிறோம். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஆக்சிஜன் தேவை நாட்டில் ஏற்பட்டது. மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தியை இதுவரை இல்லாத அளவு நாம் செய்திருக்கிறோம். அனைத்து கட்டமைப்புகளையும் பயன்படுத்தி ஆக்சிஜனை அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு சென்றுள்ளோம்.

 

ஆக்சிஜன் உள்ளிட்ட மருத்துவ தேவைகளை விரைந்து  எடுத்துச் செல்லும் வசதிப் பெற்றிருக்கிறோம். மக்களைக் காப்பாற்றுவதற்காக நாட்டின் முப்படைகளையும் பயன்படுத்தினோம். கரோனாவுக்கு எதிரான போரில் உலக அரங்கில் இந்தியா முன்களத்தில் நின்று போராடி வருகிறது. வெளிநாடுகளில் இருந்து தேவையான மருந்துகள் அனைத்தையும் கொண்டு வந்துள்ளோம். கரோனா என்ற அரக்கனை ஒழிப்பதற்காக முகக்கவசம், ஆக்சிஜன் ஆகியவற்றை அதிகமாக உற்பத்தி செய்கிறோம். 

 

கரோனா நமது மிகப்பெரிய எதிரி; அதை வீழ்த்த நம்மிடம் இருக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசிதான். தடுப்பூசியை இதற்கு முன் இல்லாத வகையில் விரைவாக உற்பத்தி செய்து பயன்படுத்துகிறோம். வரலாற்றில் இல்லாத அளவுக்குத் தடுப்பூசி உற்பத்தியில் முன்னேற்றம் கண்டுள்ளோம். கரோனா தடுப்பு கட்டுப்பாடுகளைப் பின்பற்றுவது மட்டுமே நமக்குக் கவசமாக இருக்கும். தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளன. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் லட்சக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றி உள்ளன" என்றார்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிப்ரவரி 14; “இந்தியா என்றும் மறக்காது” - பிரதமர் மோடி 

Published on 14/02/2023 | Edited on 14/02/2023

 

pm modi  tweet about Pulwama incident

 

கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா பகுதியில் வாகனத்தில் சென்று கொண்டிருந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர். இதில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

 

இந்நிலையில் பிப்ரவரி 14 ஆம் தேதியான இன்று புல்வாமா தாக்குதலில் தங்களது உயிரைத் தியாகம் செய்த இந்திய வீரர்களை என்றும் மறக்கமாட்டோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “புல்வாமா தாக்குதலில் உயிர் நீத்த வீரர்களை நினைவுகூர்வோம். அவர்களின் உன்னத தியாகத்தை என்றும் இந்தியா மறக்காது. வலுவான மற்றும் வளர்ந்த இந்தியாவை உருவாக்க அவர்களின் தைரியம் நம்மை  ஊக்குவிக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

 

 

Next Story

பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் பங்கேற்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published on 26/11/2022 | Edited on 26/11/2022

 

 

Chief Minister M. K. Stalin will participate in the meeting led by the Prime Minister!

 

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறவிருக்கும் முதலமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்லவிருக்கிறார். 

 

அடுத்தாண்டு ஜி20 நாடுகளின் மாநாடு இந்தியாவில் நடைபெறவுள்ளது. இது தொடர்பான, முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச முதலமைச்சர்கள் கலந்து கொள்ளும் கூட்டம் வரும் டிசம்பர் 5- ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

 

இதில் கலந்து கொள்வதற்காக வரும் டிசம்பர் 4- ஆம் தேதி அன்று டெல்லி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டிசம்பர் 5- ஆம் தேதி அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவிருக்கிறார். இந்த பயணத்தின் போது, தனிப்பட்ட முறையில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து தமிழகம் நலன் சார்ந்த கோரிக்கைகளையும் முன் வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டிருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றன. 

 

ஏற்கனவே, பிரதமர் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.