coronavirus vaccine union government new announcement

Advertisment

அடுத்த வாரம் கரோனா தடுப்பூசி முன்னோட்டம் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பான மத்திய அரசின் அறிவிப்பில், ஆந்திரா, அசாம், குஜராத், பஞ்சாப் ஆகிய நான்கு மாநிலங்களில் அடுத்த வாரம் கரோனா தடுப்பூசி முன்னோட்ட நடவடிக்கைகள் நடைபெறுகிறது. கரோனா தடுப்பு மருந்தைக் கொண்டு செல்வதற்கான வழிமுறைகள், தடுப்பூசி போடும் பணிகள் குறித்த முன்னோட்டம் நடைபெறும். லட்சத்தீவு தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் கரோனா தடுப்பூசிக்கான பயிற்சிகள் நிறைவு பெற்றுள்ளது. கரோனா தடுப்பூசி விநியோகம் கடைக்கோடி மக்களையும் சென்றடையும் என்பதை உறுதிப்படுத்த இந்த முன்னோட்டம் நடைபெற உள்ளது. பொது மக்களுக்கு தடுப்பூசி செலுத்த நாடு முழுவதும் 7,000 பேருக்கும் அதிகமானோருக்கு மாவட்ட அளவில் பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

கரோனா தடுப்பூசியைப் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் முன்னோட்ட நடவடிக்கை நடக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.