Skip to main content

இந்தியாவில் கரோனா தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி கோரி ஃபைசர் விண்ணப்பம்!

Published on 06/12/2020 | Edited on 06/12/2020

 

coronavirus vaccine pfizer apply to dcgi

 

உலகம் முழுவதும் கரோனாவுக்கு எதிரான தடுப்பூசி மருந்துகள் தயாரிக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியாவிலும் மூன்று தடுப்பூசிகள் இறுதிக்கட்ட பரிசோதனைகளில் இருக்கின்றன. அத்துடன் பல்வேறு வெளிநாட்டு தடுப்பூசிகளும் பரிசோதனை மற்றும் தயாரிப்பில் உள்ளன. இந்தியாவின் தடுப்பூசி தயாரிக்கும் பணிகளை மத்திய சுகாதாரத்துறை தீவிரமாக கண்காணித்தும், ஊக்கப்படுத்தியும் வருகிறது. 

 

கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் கரோனா தடுப்பூசியை தயாரித்து பரிசோதனை செய்து வரும் நிறுவனங்களுக்கு நேரடியாக சென்று விஞ்ஞானிகளுடன் தடுப்பூசி எந்த நிலையில் உள்ளது உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார். 

 

இந்த நிலையில் தனது கரோனா தடுப்பூசிக்கு இந்தியாவில் அவசர கால பயன்பாட்டுக்கான அனுமதியை வழங்குமாறு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளரிடம் (Drugs Controller General of India- DCGI) ஃபைசர் (Pfizer) நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. அதில் தடுப்பூசியை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்து இந்தியாவில் விற்க அனுமதிக்குமாறு கோரிக்கை விடப்பட்டுள்ளது. இந்தியாவில் கிளினிக்கல் சோதனைகளை நடத்தாமலேயே தடுப்பூசியை விற்க அனுமதிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

 

ஃபைசர் மற்றும் பயோன்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள கரோனா தடுப்பூசிக்கு டிசம்பர் 2- ஆம் தேதி பிரிட்டனும், டிசம்பர் 4- ஆம் தேதி   பஹ்ரைனும் தற்காலிக அனுமதி வழங்கின என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிகரிக்கும் கொரோனா தொற்று; மீண்டும் தொடங்கிய தடுப்பூசி உற்பத்தி!

Published on 13/04/2023 | Edited on 13/04/2023

 

covid infection increased again started covershield vaccination 

 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போது கணிசமாக உயர்ந்து வரும் நிலையில், இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் அரசு மருத்துவமனைகள் கொரோனாவை தடுப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

 

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவில் அமைந்துள்ள சீரம் நிறுவனம் கோவிட் தொற்றுக்கான தடுப்பூசியான கோவிட்ஷீல்டை உற்பத்தி செய்து வந்த நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்து வந்ததால் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தடுப்பூசி உற்பத்தி செய்வதை நிறுத்தியது.

 

தற்போது இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் வேளையில் மீண்டும் கோவிஷீல்ட் தடுப்பூசி உற்பத்தியைத் தொடங்கியுள்ளதாக சீரம் நிறுவனத்தின் சிஇஓ அடார் பூனவல்லா தெரிவித்துள்ளார். 


 

Next Story

நாள் ஒன்றுக்கு 9 ஆயிரம் பேர் மரணம்; கொரோனாவால் முடங்கிய சீனா

Published on 02/01/2023 | Edited on 02/01/2023

 

9 thousand people passed away per day; China paralyzed by Corona

 

சீனாவில் கொரோனா பரவலைத் தடுக்க அந்நாடு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு இடங்களில் முகாம் அமைத்து தீவிர பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பி.எஃப்.7 வகை தொற்று அந்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையை வெகுவாகப் பாதித்துள்ளது.

 

பல்வேறு இடங்களில் முகாம் அமைத்து தீவிர பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் நாளுக்கு நாள் பரவலின் வேகம் அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் நாள்தோறும் அனுமதிக்கப்பட்டுக் கொண்டே உள்ளனர்.

 

அதே சமயம் கொரோனா தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் காணப்படுகிறது. சீனாவில் நாள்தோறும் 9 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. மருத்துவமனைகளில் சடலங்கள் அதிகரித்துக்கொண்டே இருப்பதோடு மட்டுமல்லாமல் கொரோனா தொற்று அச்சத்தினால் இறந்தவர்களின் உடல்களை வாங்குவதற்கு உறவினர்கள் தயக்கம் காட்டுகின்றனர். 

 

இது குறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.