coronavirus vaccine india pm narendra modi tweets

Advertisment

இந்தியாவில் அவரச கால பயன்பாட்டுக்கு கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு மருந்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "கரோனா இல்லாத நாடாக இந்தியாவை உருவாக்குவதில் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி கண்டுபிடிப்பிற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்ட விஞ்ஞானிகளுக்கும், இந்தியாவுக்கும் வாழ்த்துக்கள். ஒப்புதல் அளிக்கப்பட்ட தடுப்பூசிகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது; ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை. மருத்துவர்கள், காவல்துறையினர், தூய்மை பணியாளர்கள் கரோனா முன்களப் பணியாளர்களுக்கு நன்றி. பல உயிர்களைக் காப்பாற்றிய அவர்களுக்கு நாம் என்றும் நன்றி உணர்வுடன் இருப்போம்" என்று குறிப்பிட்டுள்ளார்.